மாநகராட்சி பள்ளியின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாஜக கட்சி பேனரை தலைமை ஆசிரியர் தலையிட்டதன் பெயரில் பள்ளி மாணவர்கள் அகற்றினர்.
கோவை வெரைட்டி ஹால் ரோடு சிட்டி உயர்நிலைப் பள்ளியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.50 லட்சம் ஒதுக்கீடு செய்து சிட்டி மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபநப உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக பள்ளியின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாஜகவினர் கட்சியின் பேனர்களை தலைமையாசிரியர் தலையிட்டதன் அடிப்படையில் பேனர்களை மாணவர்கள் அகற்றினர்.