உயர்நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசிய ஹெச். ராஜா கைது குறித்து காவல்துறைக்கு பாஜக தொண்டர் ஒருவர் சவால் விடும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஹெச். ராஜா கைது குறித்து சவால் விடும் தொண்டர்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தின் தடையையும் மீறி ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் விநாயகர் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று கூறி காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எச். ராஜா பேசியது குறித்த செய்திக்கு:
அப்போது, உயர்நீதிமன்றத்தின் தடை குறித்து போலீசார் விளக்க முயன்றபோது, நீதிமன்றம் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசினார் ராஜா. இதனை கண்டித்து அவரை கைது செய்யக் கோரி பலரும் வலியுறுத்தினர்.
நீதிமன்றத்தை மதிப்பவன் நான்... அந்த குரல் என்னுடையது இல்லை - வீடியோ குறித்து மறுப்பு கூறிய எச். ராஜா செய்தியை படிக்க:
இந்நிலையில் இன்னும் 4 வாரங்களில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது. இதனிடையே பொது மேடை நிகழ்ச்சி ஒன்றில் ராஜா கலந்துக்கொண்ட வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஹெச்.ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: ‘4 வாரங்களில் நேரில் ஆஜராக வேண்டும்’
அதில், பாஜக தொண்டர் ஒருவர் போலீசுக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். “எச். ராஜா தலைமறைவா? ஏண்டா எங்கள் சிங்கம் இங்க தான் கண் முன்னே உட்கார்ந்திருக்கிறாரு. எங்கள் கண்ணுக்கு தெரியுது உங்களுக்கு தெரியலையா? இங்கே லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறோம்.
எங்களை மீறி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. முடிந்தால் எங்களை தாண்டி கைது செய்யுங்கள். எங்களை தாண்டினால் தான் உங்களால் எச். ராஜாவை கைது செய்ய முடியும்.” என்று ஆவேசமாக பேசினார்.