/tamil-ie/media/media_files/uploads/2023/07/Anbil-Mahesh-1.jpg)
அன்பில் மகேஷ் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்த 100 பா.ஜ.க-வினர்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த 100 பேர் தி.மு.க-வில் இணைந்தனர். இது குறித்த விபரம் வருமாறு:
'என் மக்கள் என் நாடு' என்ற முழக்கத்துடன் இம்மாதம் 28-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 168 நாட்களுக்கு அண்ணாமலை நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில், திருச்சியில் பா.ஜ.க மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் உட்பட அக்கட்சியை சேர்ந்த 100 பேரை கொத்தோடு தி.மு.க.வுக்கு தூக்கியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இது குறித்த விபரம் வருமாறு:
திருச்சி பா.ஜ.க மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் பா.ஜ.க மாநில தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் இந்த இணைப்பு படலத்தை அரங்கேற்றியுள்ளனர். பா.ஜ.க-விலிருந்து திமுகவில் இணைந்தவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வாருங்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கழகம் காப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
'என் மக்கள் என் நாடு' என்ற முழக்கத்துடன் இம்மாதம் 28-ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 168 நாட்களுக்கு அண்ணாமலை நடைபயணம் தொடங்கவுள்ள நிலையில் அக்கட்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணைந்திருப்பது பா.ஜ.க தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தி.மு.க-வில் இணைந்துள்ள லோகநாதன், இன்னும் பலரை பா.ஜ.க-விலிருந்து தி.மு.க-வுக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை அறிந்த அக்கட்சியின் தலைமை அதற்கு முட்டுக்கட்டை போடும் பணிகளை தொடங்கியுள்ளது.
திருச்சி என்றால் அமைச்சர் கே என் நேரு என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷின் செல்வாக்கை பொறுத்தவரை திருச்சி தெற்கு மாவட்டத்தை கடந்து ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவது கவனிக்கத்தக்கது.
இதனால் தான் அமைச்சர் நேரு முன்னிலையில் தி.மு.க-வில் இணையாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் லோகநாதன் உட்பட பா.ஜ.க-வினர் தி.மு.க-வில் இணைந்துள்ளனர். இதேபோல் அ.ம.மு.க, அ.தி.மு.க-விலிருந்தும் சில முக்கிய பிரமுகர்களை தி.மு.க-வில் இணைப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் அன்பில் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பது திருச்சி அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.