பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் குணமடைய வேண்டி பா.ஜ.க-வினர் மண்சோறு சாப்பிட்டும் அங்கப் பிரதர்ஸ்ணம் செய்தும் வழிபாடு நடத்தினர்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" நடைபயணம் நடத்தி வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து விட்டு சென்னை திரும்பினார்.
இதனையடுத்து மீண்டும் அவரது என் மண் என் மக்கள் நடைப்பயணமானது 6"ம்தேதி மேட்டுப்பாளையத்தில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது ஆதரவாளர்கள், பா.ஜ.க தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும் அண்ணாமலையின் நடை பயண தேதியும் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர் பூரண குணமடைய வேண்டி கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் வசந்தராஜன் ஆலோசனைப்படி தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவர் செல்வகுமார், ஆலந்துறை மண்டல தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க தொண்டர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மண் சோறு சாப்பிட்டும் கோவில் வளாகத்திற்குள் அங்க பிரதோஷணம் செய்தும் வேண்டிக்கொண்டனர். பின்னர், அவர் விரைவில் குணமடைய வேண்டிய சிறப்பு வழிபாடு நடத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“