தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி 4ஆவது வார்டில் மொத்தம் 68. 03 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் அதிமுக வேட்பாளர் உஷா மற்றும் பாஜக வேட்பாளர் மனுவேல் இருவருமே சம அளவில் வாக்குகள் பெற்றிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, வெற்றி வேட்பாளரை தேர்ந்தெடுக்க குலுக்கல் முறை கடைப்பிடிக்கப்பட்டது. 266 வாக்குகளுடன் சமநிலையில் இருந்ததால், நடத்தப்பட்ட குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் மனுவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளரை பாஜக வேட்பாளர் வீழ்த்திருப்பது கவனிக்கத்தகக்து.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil