கமல்ஹாசனை எதிர்த்து வானதி சீனிவாசன்: பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியல்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் தொகுதியிலும் நடிகை குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிர் பிரிவு பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

bjp, bjp candidates list, tamil nadu assembly elections 2021, பாஜக, பாஜக வேட்பாளர்கள் பட்டியல், குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி, வானதி சீனிவாசன் vs கமல்ஹாசன், l murugan contest in dhrapuram, kushboo contest in thousand light, vanathi srinivasan

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை இன்று வெளியிட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சி தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் எல்.முருகன் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிர் பிரிவு பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவர் மநீம தலைவர் கமல்ஹாசனுடன் நேரடியாக மோதுகிறார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அரவக்குறிச்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில்பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “பாஜகவின் மத்திய தேர்தல் குழு இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜகவின் மற்ற மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பாஜக தேர்தல் குழு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள கீழ்கண்டவர்களின் பெயர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளது.

பாஜக வேட்பாளர்கள் பட்டியல்

1.தாராபுரம் – எல்.முருகன்
2.துறைமுகம் – வினொஜ் பி செல்வம்
3.ஆயிரம் விளக்கு – குஷ்பூ
4.திருவண்ணாமலை – எஸ்.தணிகைவேல்
5.திருக்கோயிலூர் – கலிவரதன்
6.மொடக்குறிச்சி – டாக்டர் சி.கே.சரஸ்வதி
7.கோவை தெற்கு – வானதி சீனிவாசன்
8.அரவக்குறிச்சி – அண்ணாமலை ஐபிஎஸ்
9.திட்டக்குடி – டி.பெரியசாமி
10.திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்
11.காரைக்குடி – ஹெச்.ராஜா
12.மதுரை வடக்கு – டாக்டர் பி.சரவணன்
13.விருதுநகர் – ஜி.பாண்டுரங்கன்
14.ராமநாதபுரம் – டி.குப்புராம்
15.திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
16.நாகர்கோயில் – எம்.ஆர்.காந்தி
17.குளச்சல் – பி.ரமேஷ்

ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 17 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp candidates list announce for tamil nadu assembly elections 2021

Next Story
தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கொரோனா தொற்று; மருத்துவமனையில் சிகிச்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express