Advertisment

நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது; முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் - அண்ணாமலை

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர், தேவநாதன் 525 கோடி ரூபாய் நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai K

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன், முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர், தேவநாதன் 525 கோடி ரூபாய் நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Advertisment

மயிலாப்பூரில் 100 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் மயிலாப்பூர் ஹிந்து  பெர்மனன்ட் ஃபண்ட் என்ற நிதி நிறுவத்தின் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், தனியார் தொலைக்காட்சி உரிமையாளருமான வேதநாதன் கடந்த 20 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார். 

இந்நிலையில், இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நிதியைத் திருப்பித் தர மறுத்ததால், ரூ.525 கோடி நிதி மோசடி புகாரில் நிதி நிறுவனத் தலைவரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன்  போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.  தேவநாதன், கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டார்.

இந்நிலையில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன், முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர், தேவநாதன்
 தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.

மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பா.ஜ.க உறுதியாக உள்ளது. தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும். 

அதே நேரத்தில், தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment