BJP councillor Uma anandan contradictory comment about Hindhi: சென்னை மாமன்ற கூட்டத்தில் முதலில் ஹிந்தி தெரியாது எனக் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது. இருப்பினும், அவர் வெளியில் வந்து எனக்கு ஹிந்தி தெரியும் என்று கூறினார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும். ஆட்சியை நடத்த இந்திதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். அமைச்சரவையின் 70% நிகழ்ச்சி நிரல்கள் இனி இந்தியில் தான் தயாராகும். இனி வரும் நாட்களில் வடகிழக்கு மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் இந்தி மொழித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என பேசியிருந்தார்.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், ஹிந்தி பேசாத மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன், “நமஸ்காரம். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகள் கலந்து நான் பேசுவேன் மன்னித்து விடுங்கள்.” என்றார்.
இதையும் படியுங்கள்: மாநிலங்கள் காக்கப்பட வேண்டும்; ஒற்றைத் தன்மையை உருவாக்க பாஜக முயற்சி – ஸ்டாலின்
அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர்கள் ஹிந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என்று தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த உமா ஆனந்தன், தனக்கு ஹிந்தி தெரியாது என்றார். இதைக்கேட்ட திமுக உறுப்பினர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து பேசிய அவர், கவுன்சிலர்களுக்கும் சம்பளம் அவசியம், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரினார். அப்போது குறுக்கிட்ட துணை மேயர் மகேஷ்குமார், ஒன்றிய அரசு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டால் உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளிக்க, திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
ஆனால், மாமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமா ஆனந்தன், எனக்கு ஹிந்தி தெரியும். ஆனால், பிரச்சனை வேண்டாம் என்று வேண்டும் என்றுதான் எனக்கு ஹிந்தி தெரியாது என்று மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தேன் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
'இந்தி தெரியாது... ஆனா தெரியும்..!' டபுள் கேம் ஆடிய பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன்
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் ஹிந்தி தெரியாது என கூறிய பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன். பின்னர் செய்தியாளர்களிடம் ஹிந்தி தெரியும் என பேச்சு
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.