சமீபத்தில் பாஜக இளைஞரணியை சேர்ந்தவர்கள் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து தனது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசைன் கூறியதாவது, " இது முட்டாள்த் தனமான செயல். பாஜக விற்கும் அதிமுகவிற்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு நிர்வாகிகள் செல்வது இயல்பு தான்.
அது புரட்சித்தலைவர் காலத்திலும், அம்மா காலத்திலும் நடந்தது, எடப்பாடி காலத்திலும் இது போன்ற செயல்கள் நடக்கிறது.
கட்சியின் தலைமை விரும்பாதவர்கள் மற்ற காட்சிகளில் சேர்வது இயல்பு, அதில் எந்த தவறும் இல்லை. பாஜக அதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது அவர்களுடைய தவறு.
கூட்டணி கட்சியாக இருக்கும் பொழுதே இப்படியெல்லாம் விமர்சனம் செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து", என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil