scorecardresearch

போலீஸ் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்.. பா.ஜ.க. பட்டியலின பிரிவு துணை தலைவர் கைது

போலீஸ் காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவண்ணாமலை மாவட்ட பா.ஜ.க. பட்டியலினப் பிரிவு துணை தலைவர் சி. குபேந்திரன் கைது செய்யப்பட்டார்.

BJP dalit unit man issue death threat to SI
எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மாவட்ட பட்டியலின பிரிவு துணை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் தண்டாரம்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) இரண்டு நபர்கள் குடிபோதையில் பயணிகளுக்கு இடையூறு அளிப்பதாக கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

இந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட இரண்டு பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது காவல் நிலையத்துக்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட பாஜக பட்டியலின துணை தலைவர் சி. குபேந்திரன் (55) காவல் நிலையத்துக்குள் புகுந்து, எஸ்.ஐ., பச்சையப்பன் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவலர்கள் பாஜக பட்டியலின மாவட்ட துணை தலைவர் குபேந்திரன், முத்துவேல், தங்கராஜ், ஏழுமலை மற்றும் பிரகாஷ் ஆகிய 5 கைது பேரை கைதுசெய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp dalit unit man issue death threat to si