நாகர்கோவில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு, இளைஞர் காங்கிரஸார் நேற்று (மார்ச் 3) போராட்டம் நடத்தினர். அப்போது, இளைஞர் காங்கிரஸார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின் போது இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட அங்கும் நடந்தனர்.
Advertisment
இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸார் மற்றும் பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகி மகாராஜன் என்பவரை போலீசார் நெல்லையில் கைது செய்தனர்.
அவரை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நாகர்கோவில் பா.ஜ.க. அலுவலக முற்றுகை போராட்டம், தாக்குதல் தொடர்பாக காங்கிரஸார் மற்றும் பா.ஜ.க.வினர் மீது காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பா.ஜ.க. பிரமுகர் மகாராஜன் தென்காசி மாவட்ட பா.ஜ.க. பொறுப்பாளர் ஆக உள்ளார். முன்னதாக, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்ய வலியுறுத்தி எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி தலைமையில் பா.ஜ.க.வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பை கண்டித்து காங்கிரஸார் நாடு முழுக்க பா.ஜ.க.வுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“