/indian-express-tamil/media/media_files/yq6rgWPbL0I90iKO6tA0.jpg)
பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். நமது நீதித்துறையின் மீதான எனது நம்பிக்கை இப்போது வலுவாக உள்ளது; பா.ஜ.க நிர்வாகி குஷ்பூ
பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்பதாக பா.ஜ.க தேசியக் குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தி.மு.க மூத்த நிர்வாகி பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த தீர்ப்பை வரவேற்பதாக பா.ஜ.க தேசியக் குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில், ”ஊழலுக்கு சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது, வேரிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். தி.மு.க ஊழல் மற்றும் கொள்ளையின் ஒரு உருவகமாகும், மேலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நேரம் இது. தி.மு.க அமைச்சர் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். நமது நீதித்துறையின் மீதான எனது நம்பிக்கை இப்போது வலுவாக உள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.
There should no tolerance for corruption and must be eradicated from the root. @arivalayam is an epitome of corruption and loot and it’s high time they are punished. I wholeheartedly welcome the judgement given to DMK minister #Ponmudy . My belief in our judiciary system is more…
— KhushbuSundar (@khushsundar) December 21, 2023
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.