தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை அக்கட்சியினர் மார்ச் 1ஆம் தேதி வெகுவிமரிசையாக கொண்டாடினார்கள்.
இந்தப் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. எம்.பி ஆ.ராசா, “தமிழ்நாடு ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் பாரத் மாதா ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளாது” என்றார்.
தொடர்ந்து, “இந்தியா ஒரே தேசம் அல்ல. தமிழ்நாடு ஒரே நாடு. கேரளம், ஒடியா ஒரே நாடு. இங்கு ஒரே மொழி பேசுகின்றனர். எனக்கு ராமாயணத்தில் நம்பிக்கை இல்லை. எனினும் கம்ப ராமாயணத்தில் நல்ல அம்சங்கள் உள்ளன. ஆனால் பாரதிய ஜனதாவினர் சொல்வது மோசமானது” என்றார்.
ஆ.ராசாவின் பேச்சுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதாவின் அமித் மாளவியா, “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் தொடர்ந்து வருகின்றன. சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி ஸ்டாலினின் அழைப்புக்குப் பிறகு, இது அதிகமாக உள்ளது.
பகவான் ராமை கேலி செய்கிறார், மணிப்பூரிகளை இழிவுபடுத்தும் கருத்துக்களைக் கூறுகிறார். ஒரு தேசமாக இந்தியா என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குபவர் ராஜா. காங்கிரஸ் மற்றும் பிற ஐ.என்.டி.ஐ கூட்டணிக் கூட்டாளிகள் அமைதியாக உள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்தியா கூட்டணி பதில்
இந்த நிலையில், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், “இது இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு அல்ல; ஆ. ராசாவின் தனிப்பட்ட பேச்சு” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“