scorecardresearch

பாஜக பிரமுகர் கல்யாண் கைது: சிறையில் அடைப்பு

BJP Kalyanaraman Arrested: கல்யாண் கைதுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன.

பாஜக பிரமுகர் கல்யாண் கைது: சிறையில் அடைப்பு

BJP Kalyan Arrested At Mettupalayam: பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாண் என்கிற கல்யாணராமன். சமூக வலைதளங்களில் அந்தக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடுகளில் வீரியமாக இயங்கி வருபவர். மாற்று மதத்தினர் குறித்த இவரது விமர்சனங்களும் அவ்வப்போது சர்ச்சையைக் கிளப்புவது உண்டு.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் அங்கேயே திரண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை போலீஸ் அப்புறப்படுத்தியது.

பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை திரும்பும் வழியில் கட்சிப் பிரமுகர் ஒருவர் இல்லத்தில் கல்யாண் உணவு சாப்பிட்டார். அப்போது அங்கு வந்த போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவினாசி கிளைச் சிறையில் போலீஸார் அடைத்தனர்.

கல்யாண் கைதுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

 

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp kalyan kalyanaraman arrested at mettupalayam

Best of Express