scorecardresearch

குஷ்புவுக்கு புதிய பதவி; தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு புதிய பதவி; தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக நடிகை குஷ்பு பணியாற்றி வந்தார். இன்று, அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து குஷ்பு கூறியதாவது, “தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களுக்கான சுயமரியாதையின்மை ஆகியவற்றை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

அந்த வகையில் தற்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் போராடுவோம். திமுக நிர்வாகி ஒருவர் பாஜகவில் உள்ள பெண்களை பற்றி மிகவும் அவதூறாக பேசியிருந்தார். அவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தேன். அந்த நபர் தேசிய மகளிர் ஆணையத்திலேயே மன்னிப்பு கேட்டார்”, இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, பெண்களுக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டதற்காக தமிழக பாஜக கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்.

இது அவரது விடாமுயற்சி மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான போராட்டத்திற்கான அங்கீகாரம் இது”, என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp leader and actress kushboo appointed as a member of national womens association

Best of Express