Advertisment

கேப்டனிடம் அரசியல் அனுபவம் பெற்ற அண்ணாமலை: வெளியில் தெரியாத குரு சிஷ்யன் உறவு!

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்திடம் ஒரு மாணவராக பேசி பழகியுள்ளார் அண்ணாமலை. இந்த நிலையில், இன்று மறைந்த விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

author-image
WebDesk
New Update
Annamalai in coyambedu

விஜயகாந்த் உடலுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார். (Photo credit Thanks to Thanthi TV)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Annamalai last tribute to vijayakanth |  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான கு. அண்ணாமலை, கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசியல் இன்டன்ஷிப் படித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்திடம் ஒரு மாணவராக பேசி பழகியுள்ளார். இந்த நிலையில், இன்று மறைந்த விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

தொடர்ந்து, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
நடிகர் விஜயகாந்த் 2019 மக்களவை தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்தார். பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கூட கலந்துகொண்டார்.

அப்போது அவரை பிரதமர் நரேந்திர மோடி ஆரத் தழுவிய காட்சிகளும் உண்டு. ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த், “சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை கொரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அண்ணாமலை, “அவரது உடலை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்” என தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijayakanth Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment