Advertisment

உண்மையை தடுக்க முடியாது; எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் – அண்ணாமலை

உண்மை என்ன என்பதை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Tamil Nadu BJP chief K Annamalai

எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உண்மை என்ன என்பதை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ”மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1956 ஆம் ஆண்டு நடந்த தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணா பேசியதாகவும், இதனால் முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததாகவும், அண்ணாவும், பி.டி. ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும்” கூறினார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையே, அண்ணாமலையின் இந்த பேச்சு இருதரப்பினரிடையே மோதலை ஏற்படுத்துவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். இது தொடர்பாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவரத்தை அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அரசுச் செயலாளர் பிறப்பித்த அரசாணையில், ”அண்ணாமலையின் பேச்சு இருதரப்பினரிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பது ஆவணங்களை பரிசீலித்த போது தெரிகிறது. எனவே, அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திருப்தி கொள்கிறது. இதற்கு தமிழக ஆளுநரும் அனுமதி அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த அனுமதி நகலை பகிர்ந்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”கடந்த 3 ஆண்டுகளில், கொடூரமான தி.மு.க அரசு என் மீதும், எங்கள் பா.ஜ.க நிர்வாகிகள் மீதும் உண்மையைப் பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது மற்றும் சமீபத்தில் மீண்டும் என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது.

கடந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை நினைவுபடுத்தியதற்காக வழக்குத் தொடரப்பட்டுள்ளது மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு கட்சி பதவிகளை வழங்கியது, ஆகியவை தமிழகத்தில் உள்ள இந்த தி.மு.க அரசின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது.

1956ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை, மக்களின் நினைவுகளில் இருந்து துடைத்தெறிய விரும்பி, மீண்டும் நினைவுப்படுத்தியதற்கு தி.மு.க அரசுக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க அரசுக்கு எங்களின் செய்தி: உண்மை என்ன என்பதை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது. எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள்! இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment