Advertisment

கோவை சிறையில் பாலாஜி உத்தம ராமசாமியுடன் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு

பா.ஜ.க சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை மத்திய சிறையில் இருக்கும் பாலாஜி உத்தமராமசாமியை இன்று சந்தித்தார்.

author-image
WebDesk
New Update
BJP, BJP leader CP Radhakrishnan, CP Radhakrishnan meets Balaji Uththama Ramasamy, பாலாஜி உத்தம ராமசாமியுடன் சி.பி ராதாகிருஷ்ணன் சந்திப்பு, CP Radhakrishnan meets Balaji Uththama Ramasamy at Coimbatore central jail

தந்தை பெரியார் குறித்தும் ஆ.ராசா குறித்தும் இழிவாக பேசியதாக கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தமராமசாமி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் பாலாஜி உத்தமராமசாமியை அக்கட்சியின் மூத்த தலைவரும் , கேரள மாநில பா.ஜ.க பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை மத்திய சிறையில் சந்தித்து பேசினார்.

பின் கோவை சிறை வாசலில் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை அரசே தவறாக பயன்படுத்தி இருக்கிறது எனவும், மாற்று அரசியல் சிந்தனையே இருக்க கூடாது என ஒரு அரசு நினைத்து கைது செய்து இருப்பது இந்தியாவில் இதுவே முறை எனவும்

பாலாஜி உத்தமராமசாமி பேசியதற்கு நடவடிக்கைகள் எடுத்து இருக்க வேண்டிய அரசு, அவர் மீது பி.சி.ஆர் சட்டத்தை போட்டு இருக்கிறது எனவும்,

அரசே தவறாக பி.சி.ஆர் வழக்கு பயன்படுத்தி இருப்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.

இதுதான் திமுகவின் சரிவின் துவக்கம் எனவும்

பா.ஜ.க வழகறிஞர்கள் ஜாமினுக்கு சட்டரீதியாக முயன்று வருகின்றனர். மேலும், மறுபுறம் இன்னும் கொஞ்சநாள் அவரை சிறையில் வைக்க காவல் துறையும் முயன்று வருகின்றது எனவும் மக்களுக்காக அவர்கள் உள்ளே இருக்கின்றனர். சிறையில் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் என தெரிவித்தார்.

மேலும், தேச விரோத அமைப்புகள் யாரை வேண்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கின்றனர் எனக்கூறிய அவர், பி.எப்.ஐ அமைப்பு இந்தியாவாக இல்லாமல், பாகிஸ்தானாக செயல்பட்டு வந்தது எனவும் , அதன் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது வரவேற்கதக்கது.

தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கேரள மாநில பா.ஜ.க பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி. ரஹ்மான் கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment