வஃக்பு திருத்த சட்டத்தை இஸ்லாமிய பெண்களே தேங்க்யூ மோடி என வரவேற்றுள்ளனர் என காரைக்குடியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் எச். ராஜா, ”கோவில்களுக்கு ஒரு பைசா கூட செலவழிக்காமல் அதில் வரும் வருமானத்தை மட்டும் தி.மு.க அரசு திருடி வருகிறது. வஃக்பு சட்ட திருத்தத்தை எதிர்க்கும் எல்லா கட்சிகளும் இந்து விரோத கட்சிகள் தான். இஸ்லாமியர்களின் மத உரிமைகளில் தி.மு.க அரசு தலையிடுவது வெட்கக்கேடானது. வஃக்பு திருத்த சட்டத்தை இஸ்லாமிய பெண்களே தேங்க்யூ மோடி என வரவேற்றுள்ளனர். ராணுவம் மற்றும் ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக அதிக நிலங்களை கொண்டது வக்ஃப் போர்டுதான்
தி.மு.க ஆட்சியில் போதைப்பொருள் புழக்கங்கள் அதிகமாகிவிட்டது. எட்டு வயது குழந்தை கூட போதை பொருள் உபயோகிப்பதாக செய்திகள் வருவது வேதனை அளிக்கிறது.
தமிழ் மொழி பற்று இல்லாததால் தான் கச்சத்தீவை தாரை வார்க்கும் போது தி.மு.க மௌனம் சாதித்ததது. இலங்கை அனுமதியில்லாமல் மத்திய அரசால் கச்சத்தீவை திரும்ப பெற முடியாது. தமிழக சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை” என்று கூறினார்.