BJP leader Karuppu Muruganandam announced protest against MRK Pannerselvam: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிரட்டிப் பார்க்கலாம், அச்சுறுத்திப் பார்க்கலாம் என திமுக நினைத்தால் அக்கட்சி ஒட்டு மொத்தமாக அழிக்கப்படும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் எச்சிரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், எந்த அமைச்சர்கள் எங்களது மாநில தலைவரை மிரட்டினார்களோ அந்த அமைச்சர்களின் சட்டமன்ற அலுவலகம் முன்பு அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஊழல்களை முன் வைத்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
அந்த வகையில், கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களின் சட்டமன்ற அலுவலகம் முன்பு மிகப் பெரிய முற்றுகைப் போராட்டத்தை பாஜக நடத்தும். கடலூரில் எங்களுடைய பலம் என்னவென்று காட்டுகிறோம். முடிந்தால் அதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தடுத்துப் பார்க்கட்டும் என்றார் கருப்பு முருகானந்தம்.
பெட்ரோல், டீசல் விலையை யாரும் சொல்லாமலேயே இரண்டு முறை மத்திய அரசு குறைத்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கிறோம் என தேர்தல் வாக்குறுதியில் திமுக சொல்லி இருக்கிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை.
இதையும் படியுங்கள்: கல்லூரி படிக்கையில் போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்? ஸ்டாலின் ருசிகர தகவல்
எங்களது மாநில தலைவர் 72 மணி நேரம் கெடு கொடுத்து இருக்கிறார். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வர இருப்பதால் அது கொஞ்சம் தள்ளி போகலாம். ஆனால் மாநில தலைவர் அறிவித்துள்ளபடி நிச்சயம் நாங்கள் கோட்டையை முற்றுகையிடுவோம். மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்துவோம். இதுவரை தமிழகம் சந்தித்திராத முற்றுகைப் போராட்டமாக இருக்கும். இதை ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகளுக்காக எங்களது மாநில தலைவர் அண்ணாமலை
ஆனால் எங்களது மாநில தலைவர் அண்ணாமலை கரூரில் நடமாட முடியாது என ஒரு அமைச்சர் கூறியுள்ளார். திமுகவில் இருப்பவர்கள் அனைவரும் ரௌடிகள்தான். அப்படிப்பட்ட ரௌடிகளை வைத்திருப்பவர்கள் இப்படிதான் பேசுவார்கள் என எங்களது மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே கூறிவிட்டார். அதனால் நாங்களும் (பாஜகவும்) கூட அது மாதிரி ஆட்களை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றார் கருப்பு முருகானந்தம்.
எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்<
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil