விஜய் போகிற இடங்களில் கரண்ட் கட்: 'இது போன்ற செயல் சரியானது அல்ல' - கோவையில் நைனார் நாகேந்திரன் பேட்டி

த.வெ.க தலைவர் விஜய்யின் பரப்புரை குறித்து பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

த.வெ.க தலைவர் விஜய்யின் பரப்புரை குறித்து பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
nainar

விஜய் போகிற இடங்களில் கரண்ட் கட்: 'இது போன்ற செயல் சரியானது அல்ல' - கோவையில் நைனார் நாகேந்திரன் பேட்டி

கோவையில் நடைபெற்ற மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சியில் பா.ஜ.க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசியதாவது, பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பெண்களை தொழில் முனைவராக மாற்ற இலவச பொருட்கள் வழங்கப்பட்டு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழக வெற்றிக்கழக தலைவர் பிரதமர் மோடி வந்தால் மின்வெட்டு செய்வீர்களா ?
ஆர் எஸ் எஸ் தலைவர் வந்தால் மின்வெட்டு செய்வீர்களா? என கேட்கிறார். தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இதுபோல கூட்டம் நடத்தும் பொழுது தி.மு.க அரசு  மின்வெட்டை செய்வது வாடிக்கை. எடப்பாடி பழனிச்சாமி பயணிக்கும் இடங்களில் இதுபோல நடக்கிறது. அண்ணாமலை நடத்திய ’என் மண் என் மக்கள்’  பயணத்திலும் இதுபோல செய்தனர்.

தீவிர அரசியலில் இல்லாததால் விஜய்க்கு இதை பற்றி தெரியவில்லை. அவர் பிரதமர் மோடி வரைக்கும் கம்பேர் பண்ண தேவையில்லை. மற்ற கட்சிகளுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் விஜய்க்கும் நடக்கிறது. எந்த வித்தியாசமும் இல்லை. மீனவர் விவகாரம் தொடர்பாக நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதைப் போல பலசை மறந்து விட்டார் என நினைக்கிறேன்.

2004 முதல் 2014 வரை பலமுறை நானும் மீனவர்களுக்காக போராடி இருக்கிறேன். பத்து வருஷத்துக்கு முன்பாக காங்கிரசை பார்த்து கேட்க வேண்டியதை இப்பொழுது கேட்கின்றீர்கள். மீனவர்கள் பிரச்சனையில் விஜய் அப்டேட்டாக இல்லை என்பதை தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2014 பிறகு மோடி பிரதமர் ஆகியிருக்கிறார். நிலைமை மாறி இருக்கிறது. அவர் அப்டேட் ஆகி கொள்ள வேண்டும் என்று தெரிவிதார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து,  பா.ஜ.க  மாநில தலைவர் நயினார்  நாகேந்திரன் பேசுகையில், “ அவர் போகிற இடங்களில் இது போன்ற செயல் சரியானது அல்ல. ஆனால் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது. காங்கிரஸ் கட்சியில் தி.மு.க இருக்கும்பொழுது மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள். பிணமாக தான் மீனவர்கள் வந்தார்கள். தற்போது தூக்கு தண்டனை கூட மோடி அவர்கள் மீட்டுக் கொண்டு வந்துள்ளார்கள். ஒருவர் கூட சுட்டுக் கொள்ளவில்லை” என தெரிவித்தார்

Vanathi Srinivasan Nainar Nagendran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: