பதவிக்காக மக்களை ஏமாற்றுவது நியாயமா? எம்.பி ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? பாஜக கேள்வி

Tamilnadu News Update : திரு.ரவிக்குமார் தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வாரா? தமிழக ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்புமா?

Tamilnadu MP Ravikumar VCK or DMK? : நீதிமன்றத்தில் தான் திமுக உறுப்பினர் என்று எம்பி ரவிக்குமார் பதிவுபிரமாணம் செய்துள்ள நிலையில், தற்போது விடுதலை சிறுத்தைகளின் கருத்தரங்க அழைப்பிதழில் இவரது பெயர் பொதுச்செயலாளர் என்ற முறையில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், மதிமுகவின் கனேச மூர்த்தி, கொங்கு மக்கள் கட்சியின் சின்னராஜ் ஆகியோர் கூட்டணி கட்சியாக இருந்தாலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

ஆனால்  மாற்று கட்சியினர் திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இவர்களின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியம், தேசிய மக்கள் கட்சியின்தலைவர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்திருந்த எம்பி ரவிக்குமார், தான் திமுக உறுப்பினர்தான் என்றும், 2019-ம் ஆண்டு தேர்தலில் மனுதாக்கலின் போது தான் திமுக உறுப்பினர் என்றும், அப்போது திமுக உறுப்பினர்கள் பெயர் பட்டியலில் தனது பெயர் இடமபெற்றிருந்த்தாகவும் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில்,  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்,  பூனா ஒப்பந்தம் என்ற பெயரில்  இணையவழி கருத்தமர்வு நடைபெறவுள்ளது. இந்த கருத்தமர்வுக்கான அழைப்பிதழில், எம்பி ரவிக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளத. இதனால் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் பேச்சாளர் நாராயணன் திருப்பதி என்பவர் தனது ட்விட்டர் பதிவில், “நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் அல்ல. தி மு க உறுப்பினர். வி சி க வின் வேட்பாளர் தி மு கவின்  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது” என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தான் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்கள்.

ஆனால் நேற்று (24/09/2021)  நடைபெற்ற வி சி க நிகழ்ச்சியில், அந்த கட்சியின் பொது செயலாளராக பங்கு பெறுகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? மேலும், தாங்கள் எதை செய்தாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைப்பது, மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திரு. ரவிக்குமார் அவர்களை தி.மு.கவிலிருந்து நீக்குவாரா? திரு.தொல். திருமாவளவன் நீதிமன்றத்தையும், மக்களையும் மதிப்பாரா?

திரு.ரவிக்குமார் தன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வாரா? தமிழக ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்புமா? பதவிக்காக பொய் சொல்லி தேர்தலில் நிற்பதும், நீதிமன்றத்தை ஏமாற்றுவதும் நியாயமா? என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp many questions mp ravikumar which party vck or dmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com