Advertisment

'சட்டம் - ஒழுங்கு சீர்கேடு' - செய்தியாளர் மீது தாக்குதல் குறித்து இணையமைச்சர் எல். முருகன் பேச்சு

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசியுள்ள மத்திய இணையமைச்சர் எல் முருகன், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது' என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
BJP Minister L Murugan on Tiruppur Journalist Attacked in coimbatore press meet Tamil News

திருப்பூர் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

L Murugan | Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள், தபால் துறை அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர்.

இந்நிகழ்வில் பயனாளிகள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து மத்திய இணை அமைச்சர் அவர்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுக்கான நிதி உதவி திட்டம், சுய உதவி குழுக்களான குழுக்களுக்கு கடன் உதவி, கல்விக் கடன் மற்றும் உஜ்வாளா கேஸ் இணைப்பு திட்டம் ஆகியவற்றை பயனாளிகளுக்கு மத்திய இணை அமைச்சர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அமைச்சர், 2047 ஆம் ஆண்டில் முன்னேறிய நாடாக இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைவதோடு இந்தியாவின் கட்டமைப்புகள் உலக தரத்தில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர் முருகன், திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கான மருத்துவ செலவினை முழுவதுமாக அரசு ஏற்க வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

L Murugan coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment