scorecardresearch

திண்டுக்கல் மலைக் கோயிலுக்கு செல்ல முயன்ற பாஜக வேலூர் இப்ராஹிம் கைது

பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், திண்டுக்கல் மலைக் கோயிலுக்கு செல்ல முயன்றபோது எஸ்.பி ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

BJP Minority Morcha National secretary Ibrahim arrested, Vellore Ibrahim arrested at Dindugul, Ibrahim released evening, Dindugul, திண்டுக்கல் மலைக் கோயிலுக்கு செல்ல முயன்ற பாஜக வேலூர் இப்ராஹிம் கைது, வேலூர் இப்ராஹிம் கைது, பாஜக, திண்டுக்கல், BJP, Vellore Ibrahim, Tamilnadu, Ibrahim arrested

திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு செல்ல முயன்ற பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் போலீசாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாஜகவில் சிறுபான்மையினர் பிரிவு தேசியச் செயலாளராக வேலூர் இப்ராஹிம் உள்ளார். இவர் திண்டுக்கல்லில் பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லும் நோக்கத்தில், திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் செய்தார். பின்னர், வேலூர் இப்ராஹிம் பாஜக தொண்டர்களுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள அபிராமியம்மன் கோயிலுக்கு செல்ல முயன்றார். திண்டுக்கல் மலை கோயிலுக்கு செல்ல முயன்ற இப்ராஹிம் மற்றும் அவருடன் சென்ற 30 பேரை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களைக் கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இப்ராஹிம் கூறியதவது: “பாஜகவை முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என திமுக மற்றும் திருமாவளவன் போன்றவர்கள் தவறாக சித்தரிக்கின்றனர். தீய சக்திகள், முஸ்லிம்களை தவறாக திசை திருப்பி வருகின்றன. முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என பாஜக நினைக்கிறது. திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமியம்மன் கோவிலில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளேன். திமுகஅரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் பாஜகவினரை திமுக அரசின் போலீசார் கைது செய்வது தொடர்கிறது. திமுகவின் இந்த கைது பூச்சாண்டிக்கு பாஜக அஞ்சாது” என்று கூறினர்.

பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், திண்டுக்கல் மலைக் கோயிலுக்கு செல்ல முயன்றபோது எஸ்.பி ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர், அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Bjp minority wing national secretary ibrahim arrested at dindugul