தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என அக்கட்சியின் திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தொகுதி எம்.எல்.ஏ.வும் மூத்த தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்த கேள்விக்கு அது அவர்களது தனிப்பட்ட விஷயம் என பதில் அளித்தார்.
தொடர்ந்து பாரதிய ஜனதா அதிமுக கூட்டணி தொடர்பாக பேசிய அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி கட்சிகள் இல்லாமல் எந்த கட்சியும் தேர்தலை சந்தித்தது இல்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி, திமுக பாஜக கூட்டணி, மீண்டும் காங்கிரஸ் திமுக கூட்டணி என கட்சிகள் தேர்தலை சந்தித்துள்ளன.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக அகில இந்திய தலைமை முடிவு செய்யும்.
அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம், என்றார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர்.
அண்ணாமலை உருவப்படத்தை அதிமுகவினரும், எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை பாஜகவினரும் தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மறுபடியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இதனால் இரு கட்சியினர் இடையே பரபரப்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“