vanathi-srinivasan | mansoor-ali-khan | வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் வலையொளி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை” எனப் பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்குப் பதிலளித்துள்ள நடிகை திரிஷா, “என் தொடர்பான அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “சுய விளம்பரத்துக்காக செயல்படும் இதுபோன்ற நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
நடிகை திரிஷா குறித்து அவர் பேசிய கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கதக்கவை. அவர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “மன்சூர் அலிகான் அருவருக்கதக்க நடிகர்; உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், “தாம் உண்மையில் திரிஷாவை உயர்வாக பேசியதாகவும், பழைய கதாநாயகிகளுடன் நடிக்க இயலவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“