/indian-express-tamil/media/media_files/2025/05/05/ya5KpruTaPGdyAmmUaIP.jpg)
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழக முழுவதும் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆதீனங்கள் மடாதிபதிகள் மீது அரசாங்கத்தினர் விரோதமான பார்வையுடன் நடந்து கொள்கின்றனர் என்றும் ஆதீனங்களின் முயற்சியால் தமிழ் சிறப்புற்று இருப்பதாகவும் தெரிவித்த அவர் ஆதீனங்கள் தமிழக அரசு மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் இல்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இன்று தமிழக முழுவதும் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமை வகித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் இங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை பற்றி எந்த விவரங்களும் தெரியவில்லை என்றார். சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் பற்றி அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
யாரை கைது செய்து யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் மாநில அரசை விமர்சித்தார். முதலமைச்சரைப் பற்றி பதிவு போட்டால் உடனடி கைது நடவடிக்கை இருக்கிறது ஆனால் தேசத்திற்கு விரோதமான செயல்கள் செய்பவர்கள் மீது தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றார். கோவையில் சிலிண்டர் வெடிகுண்டு சம்பவத்திற்கு பின் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.
ஆதீனங்கள் மடாதிபதிகள் மீது அரசாங்கத்தினர் விரோதமான பார்வையுடன் நடந்து கொள்வதாகவும் ஆதீனங்கள் தமிழகத்திற்கு பெருமை எனவும் அவர்கள் சமய பற்றை மட்டும் கொடுக்காமல் தமிழின் சிறப்புகள் மற்றும் பழமைகள் வெளிப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள் காரணமாக இருக்கிறார்கள் என தெரிவித்தார். ஆதீனங்களின் முயற்சியால் தமிழ் சிறப்புற்று இருப்பதாகவும் தெரிவித்த அவர் ஆதீனங்கள் தமிழக அரசு மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் இல்லை என தெரிவித்தார்.
பாகிஸ்தானியர்கள் தமிழ்நாட்டில் இருப்பது குறித்து கணக்கெடுப்பதில் திருப்தியில்லை என்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் தங்கியுள்ளார்கள்.கோவையில் துடியலூர், தொண்டாமுத்தூர் ஆகிய இடங்களில் சட்டவிரோத வெளிநாட்டவர் தங்கி இருப்பதாக தகவல்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தது போல் தெரியவில்லை என தெரிவித்தார்.
திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களில் வெளியூர் தொழிலாளிகள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல் கிடைக்கிறது என்று பதிவு செய்தும் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி தான் அளித்துள்ளதாகவும் வாக்குறுதியை நாங்கள் கேட்கவில்லை செயல்களை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.