தி.மு.க.,வினருக்கு 40 எம்.பி.,க்களை கொடுத்த மக்களுக்கு, பரிசாக மின் கட்டண உயர்வை கொடுத்திருக்கிறார்கள் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது; தி.மு.க.,வினருக்கு 40 எம்.பி.,க்களை கொடுத்த மக்களுக்கு, பரிசாக மின் கட்டண உயர்வை கொடுத்திருக்கிறார்கள். இதனால் சிறு, குறு தொழில்நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். மக்களை பாதிக்கின்ற மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறு பரீசிலினை செய்ய வேண்டும்.
மேலும் தமிழக அரசு தான் இந்தியாவிலே அதிகம் கடன் வாங்கிய அரசு. ஆனாலும் பல மடங்கு வரி உயர்வு இங்கு தான் உள்ளது.
தமிழகத்தில் தொடர் படுகொலை என்பது சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை காட்டுகிறது. அரசியல் கட்சியினருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை. இவ்வாறு வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“