Advertisment

ஆ.ராசா சிறைக்கு செல்வார்: சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

ஆ.ராசா மீது வழக்கு தொடுத்துள்ளேன். விரைவில் அவர் சிறைக்கு செல்வார். திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது. அடுத்த சட்ட சபை தேர்தலில் ஒரு மாற்று கட்சியாக பாஜக வரும் என்று மதுரையில் எம்பி சுப்பிரமணியன் சுவாமி பேசினார்.

author-image
WebDesk
New Update
ஆ.ராசா சிறைக்கு செல்வார்: சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் பாஜக மூத்த நிர்வாகி, எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் 83வது பிறந்தநாள் விழா நேற்று (செப்.25) கொண்டாடப்பட்டது. பாஜக நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும். நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் அழித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம். தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம்.

Advertisment

ராணுவ உற்பத்தி அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம், நாம் நம்பர் ஒன் என்ற நிலையில் ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து நம்மை பிரித்தனர். பாரத மாதா நம்பர் ஒன் என்று மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை, ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கருணாநிதி என்னிடம் பேசும் போது திராவிட என்று சொன்னார். சமஸ்கிருதம் என்று நான் கூறினேன். உங்களின் பெயரில் 40% சமஸ்கிருதம் என்று அவரிடம் விளக்க நூலை வைத்து விவரித்தேன். சங்கராச்சாரியார், ஆதி சங்கராச்சாரியார் சமஸ்கிருதத்தை எடுத்துச் சென்று அனைவரையும் தோற்கடித்தார். ஆங்கிலேயர்கள் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினையை உண்டாக்கினார்கள். திராவிடா என்பதில் திராவிட என்பது மூன்று கடலும் சங்கமிக்கும் இடம் என்று பொருள். இது திராவிடமாக மாறியது.

நானும் கருணாநிதியும் பலமுறை சண்டையிட்டுக் கொள்வோம். ஆனால் எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் கிடையாது.

ராம் சேது திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்த போது நான் அவரை எதிர்த்தேன். அதற்கு யார் ராமர் என்று கருணாநிதி என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் அவர் உடல் நலம் குன்றி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நான் அவருக்கு "கெட் வெல் சூன்" . ராமர் யார் என்று தெரிகிறதா? என்று கூறினேன்.

தமிழன் மூளையில் நம்பர் ஒன்னாக இருக்கிறான். ஆனால் தைரியம் இல்லை. என்னை ஏன் இவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள்? என்று வட மாநிலத்தில் உள்ள தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். புதிய தமிழனை உருவாக்க வேண்டும். ஆரியன், திராவிடன் என்ற வார்த்தை இல்லை. திமுகவின் செயலாளர் ஆ.ராசா மோசமாக பேசி வருகிறார். அது தொடர்பாக வழக்கு ஒன்றை கொடுத்துள்ளேன். விரைவில் அவர் சிறைக்கு செல்வார். திமுக தினமும் ஒவ்வொரு பொய் சொல்லி வருகிறது. அடுத்த சட்ட சபையில் ஒரு மாற்று கட்சியாக பாஜக வரும்.

கம்பராமாயணத்தை எழுதிய வால்மிகியும் ஒரு செட்டியூல் காஸ்ட் தான். ஆனால் அவரின் தாய், தந்தை பிராமணராக இருந்தவர்கள். யாராவது தகராறு செய்ய தயாராக இருந்தால், நானும் தகராறு செய்ய தயாராக இருக்கிறேன். ஆட்சியை கலைத்தால் ரத்த ஆறு ஓடும் என கருணாநிதி என்னிடம் கூறினார். 1991ஆம் ஆண்டு ஜனவரி - 31இல் ஆட்சி கலைந்தது. ஆனா ஒரு சைக்கிள் கூட எரியவில்லை. அடுத்த 2 மாத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தவர். தமிழில் பெயரை வைக்கவில்லையே? எங்கிருந்து வைத்தார். ரஷ்யன் பெயரை வைத்துள்ளார். தமிழ் தாய்மொழி. இந்தி கற்றுக் கொண்டால் என்ன தவறு. கட்டாயம் என்று நான் கூறவில்லை. இந்தியை கற்றுக் கொள்ள விரும்புவர்களை ஏன் தடை போடுகிறீர்கள்? என்று தான் கேள்வி எழுப்புகிறேன்.

பெரியார், பெரியார் என்று கூறுபவர்கள் இன்று பெரியார் இருந்திருந்தால் இன்று திமுக இருந்திருக்காது.

பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டி கொடுத்து கோயிலை தனது மகன் ராமசாமி நாயக்கர் பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி கோயிலை முறையாக பராமரித்திற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றுள்ளார். இது கி.வீரமணிக்கு தெரியுமா? அவர் எங்கே இருக்கிறார் ஓடிப் போய்விட்டார்.

கோயில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என போடப்பட்டது. வெள்ளைக்காரன் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில் தான். நமது சட்டப்படி எந்த கோயிலையும் அரசு எடுத்துக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் உள்ள 32 ஆயிரம் கோயில் திமுக அரசு கையில் இருப்பதை விடுதலை செய்ய வேண்டும். கோயிலை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். ஆனா எல்லா கோயிலையும் கையில் எடுத்து அர்ச்சகர் நியமிக்கிறார்கள். எல்லா கோயிலையும் மீட்டெடுத்து பூசாரி கையில் கொடுப்பேன். தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி பணியாற்ற உள்ளேன். எல்லோரும் ஆதரவு தாருங்கள்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment