தமிழ் இலக்கியம் கலாச்சாரம் பாரம்பரியத்தை பா.ஜ.க மதித்து வருகிறது. ஆனால் இதில் தி.மு.க.விற்கு ஏதாவது பங்கு உண்டா? என்று பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் 2024-ம் ஆண்டு இந்தியாவில் நடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா கூறுகையில்,
தமிழகம் ஒரு புண்ணிய பூமி ஏராளமான போராட்ட வீரர்களை கொடுத்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவசாயிகள் குறித்து பேசிய அவர், விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் உயர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நாட்டின் ஏற்றுமதி 14 சதவீதமாகவும், உற்பத்தி 31 லட்சம் கோடியாகவும் பொருளாதார வளர்ச்சி 13.5 சதவீதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பிரமர் மோடி அவ்வப்போது நிதி ஒதுக்கி வருகிறார். விவசாய மேம்பாட்டு திட்டத்தில் 12.46 லட்சம் கோடி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறைக்கும் கட்டுமானத்துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் பிரதமர் மோடி. 1222 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொடுத்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வைத்தே பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை பற்றி தெரிந்திருக்கும். இந்தியாவில் 200 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கொரோனா எதிர்ப்பு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இரண்டரை கோடி தடுப்பூசி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க மட்டுமே கொள்கை அடிப்படையிலாள கட்சி. அது மட்டுமே தேசிய கட்சியாக இருந்து வருகிறது. மற்ற கட்சிகள் சிறு மாநில கட்சியாக மாறி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாநிலத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. இதை எதிர்த்து பாஜக போராட வேண்டி உள்ளது.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக, பணம் கொள்ளை அடிப்பது கட்டப்பஞ்சாயத்து என புகழ்பெற்றுள்ளது. தமிழ் இலக்கியம் கலாச்சாரம் பாரம்பரியத்தை பாஜக மதித்து வருகிறது இதில் எதுவும் இல்லாத திமுக பிரிவினைவாதம் பேசிக்கொண்டிருக்கிறது. நீட் கல்வியின் மூலம் கிராம மக்களும் மருத்துவம் பெற முடிகிறது. மாற்றத்திற்காகவே பாஜக அரசியலில் உள்ளது. புதிய கல்வி கொள்கையின் மூலம் உள்ளூர் மொழியிலேயே படிக்க முடியும் என்பதால் தான் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் அந்தந்த மொழிகளிலேயே மருத்துவம் படிக்க முடியும் என்ற அர்த்தம் ஸ்டாலினுக்கு தெரியுமா என்று கேட்டுள்ளார்.
தொடர்ந்து இன்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஜே.பி.நட்டா தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டுள்ளேன். அதேபோல் மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைய பலரும் தயார் நிலையில் உள்ளனர். பாஜக ஆட்சியில் இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்திற்கான வளர்ச்சித்திட்டங்களை பாஜக முன்னெடுத்துள்ளது.
மோசமான அரசியலை முன்னெடுத்து வரும் திமுக மக்களை தவறாக வழிநடத்துகிறது. வாரிசு அரசியல் பணம் கொள்ளை, குடும்ப அரசியல் என்று இருக்கும் திமுக மக்களின் புரிந்துகொள்ளாதது வருத்தும் அளிக்கிற என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.