பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, வரும் அக்டோபர் 12 ஆம் தேதி மதுரையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறும் ‘தமிழ்நாடு தலைநிமிர் தமிழனின் பயணம்’ எனப்படும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் துவக்க விழாவில் ஜே.பி. நட்டா பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்கவிருந்தனர். நயினார் நாகேந்திரன், மதுரையில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, நவம்பர் 17 ஆம் தேதி திருநெல்வேலியில் தனது முதல்கட்ட பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.
ஆனால், சமீபத்திய தகவலின்படி ஜே.பி. நட்டா, டெல்லியில் இருந்து தோப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய தீர்மானித்துள்ளார். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருந்து வழங்கி அவர்களை உபசரிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனால், ஜே.பி. நட்டாவின் தமிழக பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ காரணம் குறித்து பா.ஜ.க. தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை.