பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஜே.பி. நட்டா பங்கேற்கு முழு நிகழ்ச்சிகள் விபரம் வெளியாகி உள்ளது.
மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்குச் செல்லும் நட்டா, அங்கே வியாழக்கிழமை மாலை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
ஜே.பி. நட்டா செப்டம்பர் 23 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளுடன், கட்சியை பலப்படுத்துவது குறித்தும் 2024 தேர்தல் பற்றியும் ஆலோசனை நடத்துகிறார்.
பா.ஜ,க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. விமானத்தில் இன்று மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்களுடன், வழி நெடுகிலும் மலர் தூவி ஜே.பி.நட்டாவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஜே.பி. நட்டா ஓய்வெடுத்தார். அங்கே பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலமானவர்கள் ஜே.பி. நட்டாவை சந்தித்து உரையாடினார்கள். வருகிற 2024 பொதுத் தேர்தலை குறிவைத்து கட்சிப் பணிகளைச் செய்து வரும் பா.ஜ.க பிரபலமானவர்களை கட்சியில் சேர்த்து வருகிறது.
பா.ஜ.க மீட்டிங் மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு கிளம்பும் நட்டா, மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம் மகாலில் நடைபெறும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
மேலும், முக்கிய நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனையும் நடத்த உள்ளார். பா.ஜ.க மகளிர் அணி நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்துகிறார். காரைக்குடியில், இரவு என்.ஜி.ஓ காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசுகிறார்.
ஜே.பி.நட்டா பொதுக்கூட்டம் முடிந்து, இரவு செட்டிநாடு பேலஸில் தங்குகிறார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஜே.பி. நட்டா செப்டம்பர் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு பிள்ளையார்பட்டி கோயில் செல்கிறார். அங்கு வழிபாடு முடிந்ததும், பா.ஜ.க தொண்டர் வீட்டில் காலை உணவு அருந்துகிறார். மீண்டும் செட்டிநாடு பேலஸ் செல்லும் ஜே.பி. நட்டா ஓ.பி.சி மற்றும் எஸ்.சி அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள், பா.ஜ.க மாவட்ட தலைவர், மாவட்ட பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். மதிய உணவுக்கு பிறகு, ஜே.பி. நட்டா சிவகங்கை நாடாளுமன்ற பூத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். மாலை 4 மணிக்கு மதுரைக்கு திரும்பும் ஜே.பி. நட்டாமாலை 5.30 மணிக்கு மதுரையிலிருந்து விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி, பாஜக மாநில பொறுப்பாளர் சிடி ரவி, துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.