தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
Advertisment
கோவிலுக்கு வந்த அவர்களுக்கு பாஜகவினர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கோயம்புத்தூரில் மரியாதை
இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் வருவதற்கு காலதாமதமானதால் அவர் பங்கேற்க இயலவில்லை.
Advertisment
Advertisement
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக இருந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பனி மூட்டத்தின் காரணத்தினால் அவரது வருகை காலதாமதம் ஆனது. எனவே தாங்கள் கோவிலுக்கு வந்து தமிழக மக்கள் இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ததாகவும் தேசியத் தலைவர் வந்தவுடன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் இன்று மாலை மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் உள்ளதாகவும் என்றார்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் எல். முருகன், எம்எல்ஏக்கள், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மற்றும் பாஜகவினர்.
தொடர்ந்து, ஜெ.பி. நட்டா வந்தால் அதிமுக தலைமையினர் வழக்கமாக சந்திப்பார்கள் ஆனால் இம்முறை யாரும் சந்திக்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்த அண்ணாமலை அதிமுகவை பொறுத்தவரை முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டு அவர்களது கூட்டத்தை நடத்தி வருவதாகவும் பாஜகவினரின் நிகழ்ச்சி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் பாஜக தேசியத் தலைவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அதன் முதல் பயணத்தை குறிப்பாக கோவை நீலகிரியில் இருந்து துவங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாஜக எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை பாஜகவை பொறுத்தவரை ஏற்கனவே கோவையில் ஒரு எம்எல்ஏ உள்ளதாகவும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருவதாகவும், அங்குள்ள அடிப்படை குறைகளை பெரும் அளவுக்கு தீர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இப்பகுதி பாஜகவை அதிக மக்கள் சார்ந்துள்ள தேசியம் மிகுந்த பகுதி என தெரிவித்த அவர் மிகப்பெரிய விஜயம் அமையும் எனத் தெரிவித்தார். முன்னதாக எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் கோவில் பகுதியில் 100க்கும் மேற்பட்ட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
மேலும் அப்பகுதியில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட் புத்தக கடைகள் துணிக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/