/indian-express-tamil/media/media_files/TCGUXFmotB1UEMYR6Ipr.jpg)
மத்திய ரயில்வே அமைச்சராக இருக்கும் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார்.
Tamilnadu Bjp | L Murugan: நாடு முழுவதும் காலியாக இருக்கின்ற மாநிலங்களவையின் (ராஜ்யசபை) 56 காலி இடங்களுக்கான தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள், நாளையுடன் (15 ஆம் தேதி) முடிவடைகிறது.
இந்த சூழலில், இந்த தேர்தலுக்கான போட்டியில் பா.ஜ.க. வெளியிட்டு உள்ள பட்டியலில், மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எல்.முருகன் மக்களவை தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை பாஜக அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஒடிசாவில் இருந்து போட்டியிடுகிறார். இதேபோல், உமேஷ் நாத் மகராஜ், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோரும் மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகின்றனர்.
பாரத தேசத்திற்கான, பாரத மக்களுக்கான சேவை செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கிய, பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களுக்கும்,தேசியத் தலைவர் திரு.@JPNadda ஜி அவர்களுக்கும்,மத்திய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah ஜி அவர்களுக்கும், மரியாதைக்குரிய திரு.@blsanthosh ஜி… https://t.co/ON6M4tuUUF
— Dr.L.Murugan (@Murugan_MoS) February 14, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.