பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் செயலருமான ஹெச். ராஜா, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது பாரதிய ஜனதா தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்கள் தமிழ்நாடு அரசு, காவல் துறைக்கு எதிராக கோஷமிட்டனர்.
திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று நடந்தது. இதில் கலந்துகொள்ள ஹெச். ராஜா காரில் சென்றார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், ஹெச். ராஜா கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. மேலும் திருமாந்துறை சுங்கச் சாவடியில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள விஸ்வாமித்திர் கோவிலில் திங்கள்கிழமை (மார்ச் 13) ஹெச். ராஜா சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/