Advertisment

தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை உள்ளது; ஜே.பி நட்டா

மு.க.ஸ்டாலினுக்கு இன்று நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க.வின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வரும்; சென்னையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேச்சு

author-image
WebDesk
New Update
jp nadda

சென்னையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகம் மிக மோசமான தலைவரை பெற்றுள்ளது. தி.மு.க தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சீரழிந்து வருகிறது என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா விமர்சனம் செய்துள்ளார்.

Advertisment

சென்னை துறைமுகம் தொகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை இன்று நடந்தது. இதில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்றார். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ஜே.பி நட்டா பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் ஜே.பி நட்டா பேசியதாவது: ”தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களின் இதயத்தில் உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் மனதில் தமிழகம் மிகவும் நெருக்கமாக உள்ளது. பிரதமர் மோடி உலகின் எந்த பகுதிக்கு சென்று உரையாற்றினாலும் தமிழ் மொழி, தமிழ் புலவர் பற்றி பேசி வருகிறார். தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நீதி, நேர்மை, சிறந்த ஆட்சிக்கான அடையாளமாக பிரதமர் மோடி மாற்றி உள்ளார். இந்தியாவின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாடாளுமன்றத்திற்குள் நுழையும்போது செங்கோல் கொண்டு செல்லப்பட்டது நமக்குக் கிடைத்த பெருமையாகும்.

தமிழ்நாட்டின் மைந்தன் எம்.எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மோடி பாரத ரத்னா விருது அறிவித்துள்ளார். இவர் பசுமை புரட்சி மட்டுமின்றி, உணவு புரட்சி மட்டுமின்றி இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கு காரணமாக இருந்தவர்.

நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு எத்தகையது என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் நன்றாக உணர்ந்திருக்கிறோம். தமிழ்நாடு மிகச்சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டது. தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு மிகப்பெரிய பங்களித்துள்ளது. தமிழ்நாடு என்றால் கலாசாரம், பண்பாடு, பழமையான மொழி குறித்து பெருமை கொள்கிறோம். தமிழ்நாட்டின் சாதுக்கள், சன்னியாசிகள், தலைவர்கள் பற்றி பெருமை கொள்கிறோம். தமிழ்நாடு கலை, இலக்கியம், தொழில்நுட்ப துறைகளில் மறக்க முடியாத சாதனைகளை செய்கிறது. தமிழர்கள் கடும் உழைப்பாளிகள்.

ஆனால் இத்தனை சிறப்புகளைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை உள்ளது. தி.மு.க. தலைமையில் இங்கு மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை. இன்று நான் வரும் வழியில் மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன. அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் யாரையும் வெளியே வர அனுமதிக்கவில்லை. இது எனக்கு எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்தியது.

இதுதான் ஜனநாயகமா? இதுதான் தமிழகத்தின் கலாச்சாரமா? இது தமிழகத்தின் கலாச்சாரம் இல்லை என்றால், இத்தகைய நபர்கள் தமிழகத்திற்கு தலைவர்களாக இருக்கக் கூடாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை வெளியேற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. தி.மு.க.வின் விளக்குகள் அணைக்கப்படும் நேரம் விரைவில் வரும்." இவ்வாறு ஜே.பி நட்டா உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Annamalai Jp Nadda
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment