/tamil-ie/media/media_files/uploads/2022/10/BJP-Protest.jpg)
திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற தி.மு.க. என்ற தலைப்பில் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கௌதம் நாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஒண்டிமுத்து, தண்டபாணி, காளீஸ்வரன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், மாவட்ட துணைத்தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா கலந்து கொண்டு பேசும்போது, தி.மு.க. அரசு தனது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக மோடி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு ஆகியவற்றினை கையில் எடுக்கிறார்கள்.
திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் இல்லை என பரப்புரை செய்வதற்காக அவருக்கு சிலை எழுப்பி இருக்கிறார்கள். டாஸ்மாக் மூலம் மதுபானங்களை விற்றுக் கொண்டிருக்கும் அரசு போதை எதிர்ப்பு நிகழ்ச்சி நடத்துவது வியப்பாக இருக்கிறது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஹரிகுமார், மகளிர் அணி ரேகா, புவனேஸ்வரி, மாநில கூட்டுறவு பிரிவு எம்பயர் கணேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கும்பக்குறிச்சி பழனிச்சாமி, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயகர்ணா, சந்துரு, வர்த்தக அணி சுவேந்திரன், லோகநாதன், மண்டலத் தலைவர்கள் மல்லி செல்வம், பழனிக்குமார், புருஷோத்தமன், இளைஞரணி சந்தோஷ்குமார், நிர்வாகிகள் வக்கீல் சுரேஷ்ராஜ், பூண்டு பாலு, ஸ்ரீராம், இளைரணி மாநிலச்செயலாளர் ஆர்.எம்.ஸ்ரீராம் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
செய்தி: க. சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.