அம்பேத்கர் சிலையிடம் மனு அளித்த பா.ஜ.க., நாகர்கோவிலில் பரபரப்பு

நாகர்கோவில் பா.ஜ.க.வினர் அம்பேத்கர் சிலை முன்பு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் பா.ஜ.க.வினர் அம்பேத்கர் சிலை முன்பு மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
BJP protests petitioning for Ambedkar statue in Nagercoil

நாகர்கோவிலில் அம்பேத்கர் சிலைக்கு மனு அளித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் வடசேரியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க. பட்டியல் அணியினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின அணி மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

Advertisment

மாவட்ட பொருளாளர் முத்துராமன், பொதுச் செயலாளர்கள் முருகன், ஜெகநாதன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட துணைத் தலைவர் தேவ், 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுனில் மாநகர பார்வையாளர் அஜித் மற்றும் பாஜக நிர்வாகிசந்திரசேகர் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் போது தி.மு.க. அரசின் பட்டியலின மக்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு குரல் கொடுக்கப்பட்டது. அப்போது, அம்பேத்கர் சிலை முன்பு மனு வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, அம்பேத்கர் சிலை முன்பு அம்பேத்கர் திருவுருவ படம் வைத்து மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க.வினர் அளித்த மனுவில், “மத்திய அரசு பட்டியலின மக்களுக்கு ஒதுக்கும் நிதியை தி.மு.க. பட்டியலின மக்களுக்கு செலவு செய்யவில்லை” எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

செய்தியாளர் த.இ. தாகூர்

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: