தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது கட்ட பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ.க 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலன பா.ம.க 10 தொகுதிகளிலும் ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா 3 தொகுதிகளிலும், டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க 2 தொகுதிகளிலும் ஏ.சி.எஸ் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது.
இந்நிலையில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க வெளியிட்டுள்ள 2வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் வருமாறு:
திருவள்ளூர் தொகுதில் பாலகணபதி போட்டியிடுகிறார். வட சென்னை தொகுதியில் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். திருவண்ணாமலை தொகுதியில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாமக்கல் தொகுதியில் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். திருப்பூர் தொகுதியில் முருகானந்தம் போட்டியிடுகிறார். பொள்ளாச்சி தொகுதியில் வசந்தராஜன் போட்டியிடுகிறார். கரூர் தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதியில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். நாகப்பட்டினம் தொகுதியில் எஸ்.ஜி.எம். ரமேஷ் போட்டியிடுகிறார். தஞ்சை தொகுதியில் எம்.முருகானந்தம் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுடியில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். மதுரை தொகுதியில் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார். விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். தென்காசி தொகுதியில் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே தொகுதியான புதுச்சேரியில் நமச்சிவாயம் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“