New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/30/muslim-2025-06-30-16-40-19.jpg)
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இந்து - முஸ்லிம் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் தலைவர் கூறியுள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இந்து - முஸ்லிம் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என திருச்சியில் வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் தலைவர் இன்று செய்தியாளிடம் தெரிவித்தார்.
வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தமிழ்நாடு கிளையின் சார்பில் திருச்சி பாக்குப்பேட்டை குலாம் அலிகான் பள்ளிவாசலில் இரண்டு நாள் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில தலைவர் சையத் முகமது புகாரி தற்போதைய இந்திய நிலை மற்றும் வக்பு பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது; புக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்ற கருத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது, இது இஸ்லாத்திற்கு மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பகிரங்கமான தாக்குதல் மற்றும் ஒடுக்குமுறை ஆகும் என தெரிவித்தார்.
வக்பு திருத்த சட்டத்தை இயற்றியவர்களுக்கு போதிய மனநிலை இல்லாத நிலையில் இந்த சட்டத்தை இயற்றியுள்ளனர், ஆ.ராசா ஒரு கூட்டத்தில் கூறுகையில், கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பவேண்டும் என்ற விவாதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அரசு இதனை இயற்றியவர்கள் காட்டுமிராண்டி என குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர்களாக இணைத்து பல்வேறு சமுதாயங்களை முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக திரித்துவிட்டனர், தஞ்சாவூர் அருகே உள்ள இந்து சமய அறநிலையைத் துறைக்கு உட்பட்ட கோவிலில் நர்கீஸ் கான் என்ற பெயர் உடையவரை இஸ்லாமியர் என்று எண்ணிக்கொண்டு ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் அவரை நீக்க வேண்டி போராட்டம் நடத்தினார்கள்.
பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இந்து - முஸ்லிம் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் முயற்சி செய்கின்றார்கள். முஸ்லிம் தனியார் சட்டவாரியம் பல்வேறு சட்டப்போராட்டங்களை மற்றும் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகிறது. வீணாக மக்களை பிளவுபடுத்தும் வகையில் இது போன்ற சட்டம் இயற்றுவதை தவிர்க்கவேண்டும். அப்பாவி முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை என்ஐஏ மற்றும் மத்திய அரசுக்கு முன் வைத்தனர்.
உயர்நீதிமன்ற அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை முன்வைத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு குறித்த விசாரணை நடத்த வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும், அவர்களை குற்றப்பரம்பரையாக்கும் வகையிலும், அச்சப்படுத்தும் வகையிலும் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் முத்திரை குத்தும் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு விசாரணை கமிஷன் அமைத்து அதன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் வெளியிட வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியது ஒபாமா என தற்போதைய அதிபர் டிரம்ப் கூறியுள்ளது யூடியூப் - இல் உள்ளது, உண்மையை எதிர்கொள்வதற்கு இஸ்லாமியர்கள் தயாராக உள்ளனர்.
தேர்தலின் போதும் மற்ற நேரங்களில் போதும் பிரச்சனைகளை சமன்படுத்த இஸ்லாமியர்களை பலி ஆடாக ஆக்கவேண்டாம். வக்பு சொத்துக்களை பதிவு செய்ய வெப்சைட் ஏற்படுத்தியது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. வக்பு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது, இந்து சொத்துக்களை வக்பு அமைப்பினர் எடுத்துக்கொண்டார்கள் என்பதை நீதிமன்றத்தில் விசாரித்து உரிய தீர்வுகாணவேண்டும். வருகின்ற தேர்தலில் மக்கள் நலன் சார்ந்த அரசு வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.