/tamil-ie/media/media_files/uploads/2022/09/H-Raja.jpg)
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா சார்பில் கபடி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச். ராஜா கபடி ஆடும் வீடியோ வைரலாகிவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது 72ஆவது பிறந்தநாளை சனிக்கிழமை (செப்.17) கொண்டாடினார். பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் தமிழ்நாட்டில் கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தப் போட்டிகள் மாவட்ட தலைநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றன. இந்த நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற கபடிப் போட்டியில் பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் ஹெச். ராஜா உற்சாகமாக கலந்துகொண்டார்.
அப்போது அவர் வேட்டியை மடித்துக் கட்டி, கபடி… கபடி.. என்று ஆட்டக்காரர்களை நோக்கி சென்றது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
பலரும் ஹெச். ராஜாவுக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகின்றன. பிரதமர் மோடியின் பிறந்தநாளை அக்.2ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கி பாஜகவினர் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
நேற்று கட்சித் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ரத்த தானம் வழங்கினர். மேலும் பிரதமரின் பிறந்த நாளில் கேக் வெட்டக் கூடாது என்றும் அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த அளவில் மரங்கள் நட வேண்டும் என்று தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.