Advertisment

பிளஸ் டூ பாடப் புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவான கருத்துக்கள்; தி.மு.க.,வை சீண்டும் பா.ஜ.க

சனாதனம் என்றால் என்ன? தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விளக்கம்; தி.மு.க.,வை வம்பிழுக்கும் பா.ஜ.க

author-image
WebDesk
New Update
School book sanatan

சனாதனம் என்றால் என்ன? தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விளக்கம்; தி.மு.க.,வை வம்பிழுக்கும் பா.ஜ.க

தமிழக அரசின் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை மேற்கோள்காட்டி தி.மு.க.,வினருக்கு பா.ஜ.க கேள்வி எழுப்பி வருகிறது.

Advertisment

சனாதன தர்மத்திற்கு எதிராக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் தொடர்ந்து விவாதப்பொருளாக உள்ளது. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்று நோய். சனாதனத்தை எதிர்க்கக் கூடாது, ஒழித்தே ஆக வேண்டும் என பேசினார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது.

பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் அமைச்சர் உதயநிதி மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில், சனாதனத்தை ஒழிப்பதற்காக தோன்றியதே தி.மு.க. ஆட்சியே போனாலும் கவலையில்லை, கொள்கையில் உறுதியாக இருப்போம் என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில், தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் இந்து சமயம் மற்றும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ்நாடு அரசின் 12ஆம் வகுப்புக்கான அறவியலும் இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தின் 58 ஆம் பக்கத்தில், "இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்துவதாகவே இருந்ததால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.

இந்து சமயம், சனாதன தருமம் என்றும், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப் பொருள். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் வேத சமயம் என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது" என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

இதனை புகைப்படமாக எடுத்து பா.ஜ.க.,வினர் சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினரை சீண்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Dmk Bjp Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment