அண்மையில் பாரதபிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா சமூதாய மக்கள் பயன்பெறும் வகையில் விஸ்வகர்மா யோஜனா எனும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இத்திட்டம் விஸ்வகர்மா சமூக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தமிழ்நாடு புதுச்சேரி விஸ்வகர்மா சமூக சங்க கூட்டமைப்பின் தலைவரான பாபுஜி சுவாமிகளை அவரது மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடத்தில் வைத்து சந்தித்து பேசினார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏ.பி.முருகானந்தம் பேசுகையில், “அ.தி.மு.க, பா.ஜ.க.கூட்டணி முறிவு குறித்த கேள்விக்கு தேசிய தலைமை இது குறித்து முடிவு செய்யும் என கூறிய அவர் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தி்ல் ஆட்சி செய்யும் தி.மு.க.அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை சரி வர நிறைவேற்றவில்லை என கூறிய அதனை திசை திருப்புவதற்காக சனாதனம் போன்ற பல்வேறு பிரச்னைகளை எழுப்புவதாக விமர்சித்தார்.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில தலைவர் அண்ணாமலை அல்லது தாம் போட்டியிடுவது என்பது கட்சியின் தலைமை முடிவு செய்யும் எனவும் தற்போது தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்துவதே அனைவரின் நோக்கம் என்றார்.
ராகுல் காந்தியின் நடை பயணத்தை அன்றே தாம் விமர்சித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி ராவணன் தான் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய பாபுஜி சுவாமிகள்,
தமிழகத்தில் பொற்கொல்லர், தச்சு மற்றும் சற்ப வேலைகள் என பல்வேறு பணிகள் செய்து வரும் விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு அரசு பணிகளில் 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தச்சு தொழில், நகை மற்றும் சிற்பத்தொழில், பாத்திரம் தயாரிக்கும் தொழில், இரும்பு வேலை செய்பவர்களுக்கு இலஙச மின் வசதி வழங்க வேண்டும், உள்ளிட்ட விஸ்வகர்மா மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“