எல். முருகன், அண்ணாமலை தமிழக லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை: காரணம் பற்றி விளக்கம்

எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடபோவதில்லை என்கிற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏன் போட்டியிடபோவதில்லை என்கிற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
BJP state leader Annamalai and minister L Murugan not contesting in Tamil Nadu Lok Sabha polls Explains Tamil News

மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Annamalai | L Murugan: நாடு முழுவதும் காலியாக இருக்கின்ற மாநிலங்களவையின் (ராஜ்யசபை) 56 காலி இடங்களுக்கான தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள், நாளையுடன் (15 ஆம் தேதி) முடிவடைகிறது.

Advertisment

இந்த சூழலில், இந்த தேர்தலுக்கான போட்டியில் பா.ஜ.க. வெளியிட்டு உள்ள பட்டியலில், மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர் எல். முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எல்.முருகன் மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்கிற அறிவிப்பை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. 

எல். முருகன் விளக்கம்

இந்நிலையில், பயம் காரணமாக மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லையா? என்கிற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், பா.ஜ.க தலைமை உத்தரவிட்டதால் மாநிலங்களவை போட்டியிடுவதாகவும், தலைமை உத்தரவிட்டால் மக்களவை தேர்தலிலும் போட்டியிட தயார் என்றும் கூறியுள்ளார். 

அண்ணாமலை பதில் 

Advertisment
Advertisements

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவரிடம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை "எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் கட்சி பணிகளை மட்டுமே செய்து வருகிறேன். நல்ல வேட்பாளர்களை போட்டியிட வைப்போம்." என்று அவர் கூறினார். 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

L Murugan Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: