BJP President L.Murugan Vel Yatra: தமிழக பாஜக அறிவித்திருந்த வேல் யாத்திரைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
தொண்டர்கள் புடை சூழ பாஜக தலைவர் எல்.முருகன்
அனு போட்ட கொலை பழி: எப்படி சரி செய்வாள் ரோஜா?
இந்நிலையில், தடையை மீறி வேல் யாத்திரை நடத்த பாஜக தலைவர் எல்.முருகன் முடிவு செய்ததின் அடிப்படையில் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்திலிருந்து வேல் யாத்திரையைத் தொடங்கினார். கடவுள் முருகனின் துணைக்கொண்டு திருத்தணியில் வெற்றிவேல் யாத்திரையைத் தொடங்குவதாக, கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். கடவுள் முருகனுக்கு யார் யார் எதிராக இருக்கிறார்களோ அவர்களின் முகத்திரையை கிழிக்கவே இந்த வேல் யாத்திரை மேற்கொள்ளப்படுவதாகவும், கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க.வும். ஸ்டாலினும் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். அப்போது எல்.முருகனுடன் ஏராளமான தொண்டர்கள் இருந்தனர்.
வேல் யாத்திரையில் பாஜக தலைவர் எல்.முருகன்
பின்னர் வேல் யாத்திரைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக வாகனத்தில், கையில் வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டார் எல்.முருகன். அவருடன் ஹெச்.ராஜா, கரு.நாகராஜன், அண்ணாமலை, சி.டி.ரவி உள்ளிட்டோரும் சென்றனர். மதுரவாயல், பூந்தமல்லி வழியாக திருத்தணி செல்ல முடிவு செய்யப்பட்டதையடுத்து பூந்தமல்லியை அடுத்த திருமழிசை கூட்டு சாலையில் தடையை மீறி வரும் பாஜகவினரை கைது செய்வதற்காக கூடுதல் கமிஷனர் அருண், இரண்டு இணை கமிஷனர்கள், மூன்று துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் நசரத் பேட்டையில் வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீஸார், முருகனின் வாகனத்துடன் ஆறு வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளித்தனர். பின்னர் திருத்தணிக்கு கையில் வேலுடன் சென்ற பாஜக தலைவர் எல்.முருகன், முருகனை தரிசித்தார்.
எஸ்பிஐ-யில் இந்த கணக்கு மட்டும் தொடங்குங்க.. வட்டியை அள்ளுங்க!
பாஜக-வின் வேல் யாத்திரை
அங்கு அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியளித்து விட்டதோ என்ற குழப்பம் நிலவியது. ஆனால் தான் திருத்தணியில் முருகனை தரிசிக்க செல்வதாக முருகன் கூறியதால், அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘
இதற்கிடையே திருத்தணி கோயிலில் வழிபட்ட பாஜக தலைவர் எல்.முருகன், பின்னர் தொண்டர்களிடையே உரையாற்றினார். இதனையடுத்து வேல் யாத்திரையை தொடங்க முற்பட்டார். இதனால் அங்கிருந்த காவல்துறையினர், எல்.முருகன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உட்பட 500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”