/tamil-ie/media/media_files/uploads/2022/11/image-55.jpg)
பா.ஜ.க ஓ.பி.சி அணி செயலாளர் சூர்யா சிவா மற்றும் அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி மாநில தலைவி டெய்சி இருவரும் உள்கட்சி பிரச்னை குறித்து போனில் ஆபாசமாக பேசி சண்டை போட்டுக்கொண்ட ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், சூர்யா - டெய்சி இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூட்டாக பேட்டி அளித்துள்ளனர்.
தி.மு.க-வின் மூத்த தலைவர் திருச்சி சிவா-வின் மகன் சூர்யா சிவா தி.மு.க-வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தி.மு.க-வில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க ஓ.பி.சி மாநில செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
யூடியூப் சேனல் மூலம் மருத்துவக் குறிப்புகளை வழங்கி பிரபலமானவர் டாக்டர் டெய்சி. இவர் பா.ஜ.க-வில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பா.ஜ.க சிறுபாண்மை அணி மாநில தலைவியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க-வில் ஓ.பி.சி அணி செயலாளர் சூர்யா சிவாவுக்கும் சிறுபான்மையினர் அணி மாநில தலைவி டெய்சிக்கும் இடையே கட்சியில் பிரச்சனை காரணமாக இருவரும் போனில் ஆபாசமாக பேசி சண்டை போட்ட ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சூர்யா சிவா தனது கட்சியில் உள்ள பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்த ஆடியோ குறித்து பலரும் பா.ஜ.க மீது விமர்சனங்களை வைத்து கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.`தமிழக பாஜக சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும், ஓ.பி.சி அணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்துக்கு வந்தது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைபா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
இந்தச் சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த ஏழு நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும், ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் தலைவருமான கனக சபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறாது.
இந்தச் சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த ஏழு நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும், ஒழுங்கு நடவடிக்கைக்குழுவின் தலைவருமான கனக சபாபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒழுங்கு நடவடிக்கைக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், போனில் டெய்சியை ஆபாசமாகப் பேசிய சூர்யா சிவாவும் அவருடன் சண்டை போட்ட டெய்சியும் தாங்கள் சமாதானம் ஆகிவிட்டதாகவும் இருவரும் அக்கா தம்பியாக தொடருவோம் என்று ஊடகங்களிடம் கூட்டாக பேட்டி அளித்தனர்.
பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநிலச் செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்சி சரண், திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
தனித்தனியாக விசாரணை நடந்தது. இது உட்கட்சி விவகாரம் என்பதால் பத்திரிகையினர் மற்றும் வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை. 3 மணிநேரத்துக்கு மேல் நடந்த விசாரணையின் அறிக்கை, தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணைக்குழுவினர் தெரிவித்தனர்.
டெய்சி சரண், திருச்சி சூர்யா ஆகியோர் கூட்டாக, திருப்பூர் பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
டெய்சியும் சூர்யாவும் திருப்பூரில் ஊடகங்களிடம் கூட்டாக அளித்த பேட்டியின்போது டெய்சி கூறியதாவது: “சமீபமாக நடந்த ஆடியோ கிளிப்பிங் சமூக வலைதளங்களி வைரலாகி, அதை எல்லா ஊடகங்களிலும் போட்டு, பா.ஜ.க-வில் இப்படி நடக்கிறது என்று போட்டுக்கொண்டிருட்ந்தார்கள். இந்த கட்சியில் எத்தனையோ நல்லவர்கள் இந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, நான் பார்த்த வரையில் இந்த கட்சியில் அக்கா, அம்மா என்று கூப்பிடுவதைத் தவிர பெண்களை வேற மாதிரி பார்த்தது இல்லை. அந்த மாதிரி ஒரு கட்சி. அதில் எந்துவுமே பிழை இல்லை. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்தது என்பதால், எதிர்க்கட்சிகளுக்கு வெறும் வாயால் அவலை மென்றவர்களுக்கு லட்டு கிடைச்ச மாதிரி, நிறைய ட்ரோல்ஸ் பண்ணிக்கொண்டு வருகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட நாங்கள், கட்சியில் இருக்கிற பெரியவர்கள் குறிப்பாக கனக சபாபதி, எங்களை கூப்பிட்டு என்னையும் சூர்யா சிவா அவர்களையும் பேச வைத்தார்கள். நாங்கள் இருவரும் பேசி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் இந்த விஷயத்தை விட்டுவிடலாம் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். இது யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் செய்யப்படவில்லை. நாங்கள் நிச்சயமாக இந்த கட்சியை விட்டுக் கொடுக்கவில்லை. பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, பிரதமர் மோடியைப் போல இந்தியா பார்க்குமா என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். இந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வந்தேன். ஏதோ ஒரு கண்பட்ட மாதிரி ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு யார் பண்ணாங்களோ எப்படியோ நடந்தது. இதை நாங்கள் இரண்டு பேரும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இதுல மனமொத்து அவரை நான் தம்பி மாதிரி அழைத்தேன். ஆரம்பத்தில அவர் என்னை அக்கானு தான் கூப்பிட்டார். நானும் தம்பினுதான் பேசிட்டு இருந்தேன். திரும்ப நாங்கள் இரண்டு பேரும் தொடர்ந்து பயணிப்பதாக முடிவு பண்ணியிருக்கிறோம். அதனால், ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிசு பண்ண வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து என்று கூறினார்.
இதையடுத்து பேசிய சூர்யா சிவா கூறியதாவது: “அக்கா (டெய்சி) சொன்ன மாதிரி இது எங்கள் ரெண்டு பேருக்கும் ஒரு தனிப்பட்ட உரையாடல். மாநிலத் தலைவர் சொன்ன மாதிரி அது தனிப்பட்ட முறையிலும் நடந்திருந்தாலும் சரி பொதுத் தளத்தில் நடந்திருந்தாலும் சரி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை சந்திக்கச் சொன்னார்கள். சபாபதி அவர்களின் தலைமையில் விசாரணை நடந்தது. நாங்கள் இருவருமே எதனால் வாக்குவாதம் வந்தது என்பதை எழுத்துப்பூர்வமாகவும் நேரிலும் கூறினோம். அக்காவும் எங்களுக்குள் நடந்த இந்த வாக்குவாதம் எனது தரப்பிலும் வெளியே செல்லவில்லை வேறு எப்படியோ சென்றுள்ளது என்று கூறினார்.
கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். கட்சியின் வெளிப்படைத்தன்மைக்கு இது உதாரணம். ஆனால் தி.மு.க அப்படி இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர், இன்றைக்கு திமுக-வில் அமைச்சர்களாக உள்ளனர். திமுக எங்களை பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.