/indian-express-tamil/media/media_files/av7aK2oF4KnIzeBB2x6q.jpg)
பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. மற்றும் மற்ற கட்சிகளின் முன்னாள் எம்.பி எம்.எல்.ஏ.க்கள் விவரம்.
Tamilnadu Bjp | AIADMK: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றன. அதேவேளையில், அரசியல் கட்சியினர் கட்சி மாறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட 16 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். அதேபோல், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும், தி.மு.க முன்னாள் எம்.பி ஒருவரும் என மொத்தம் 16 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. மற்றும் மற்ற கட்சிகளின் முன்னாள் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் விவரம் பின்வருமாறு:-
- குழந்தைவேலு (சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் முன்னாள் தி.மு.க எம்.பி).
2. கே.வடிவேல் (கரூர் முன்னாள் அ.தி.மு.க எம்எல்ஏ),
3. பி.எஸ் சென்னிமலை கந்தசாமி (அரவக்குறிச்சி முன்னாள் அ.தி.மு.க எம்.எல்ஏ),
4. கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர் மற்றும் வலங்கைமான் அதிமுக எம்எல்ஏ),
5. ஆர் சின்னசாமி (சிங்காநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ),
6. சேலஞ்சர் துரை (எ) ஆர்.துரைசாமி (கோவை தெற்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ),
7. எம்.வி.ரத்தினம் (பொள்ளாச்சி முன்னாள் அதிமுக எம்எல்ஏ),
8. எஸ்.எம்.வாசன் (வேடசந்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ),
9. எஸ்.முத்துகிருஷ்ணன் (கன்னியாகுமரி முன்னாள் அதிமுக எம்எல்ஏ),
10. பிஎஸ் அருள் (புவனகிரி முன்னாள் அதிமுக எம்எல்ஏ),
11. என்.ஆர். ராஜேந்திரன் (காட்டுமன்னார்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ),
12. ஆர்.தங்கராஜூ (ஆண்டிமடம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ),
13. எஸ்.குருநாதன் (பாளையங்கோட்டை முன்னாள் திமுக எம்.எல்.ஏ),
14. வி.ஆர்.ஜெயராமன் (தேனி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ),
15 கே.பாலசுப்ரமணியம் (சீர்காழி முன்னாள் அதிமுக எம்எல்ஏ),
16. ஏ. சந்திரசேகரன் (சோழவந்தான் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ).
#WATCH | Former AIADMK leaders join the BJP in the presence of Union Minister Rajeev Chandrasekhar and Tamil Nadu BJP President K Annamalai, in Delhi. pic.twitter.com/luFuXalMdn
— ANI (@ANI) February 7, 2024
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.