தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இந்தக் கூட்டத்தில் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்கள் செயல்படும் முறை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பெசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தென்னிந்தியாவில் இந்த முறை அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற இருக்கிறோம்; டெல்லியில் பா.ஜ.க இந்த முறை 60% வாக்குகள் பெறும்.” என்று என்று உறுதி கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “பா.ஜ.க 3-வது முறையாக ஆட்சி அமைக்கும், அது காலத்தின் கட்டாயம்; டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க வெல்லும். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு பா.ஜ.க வெற்றியை கொண்டாட தயாராக இருங்கள். தாமரை படர்ந்திருக்கும் காட்சியை தேர்தல் முடிவுக்கு பிறகு பார்ப்பார்கள். அதன்பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது” என்று உறுதியாகக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“