New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Nainar-Nagenthran.jpg)
பா.ஜ.க மற்றும் த.வெ.க கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது என நிருபர்கள் கேள்விக்கு தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.
பா.ஜ.க மற்றும் த.வெ.க., கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது'' என நிருபர்கள் கேள்விக்கு தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக அரசியல் கட்சியினர் தங்களது பணிகளை தொடங்கி விட்டனர். பாஜகவினரும் அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்தனர். அதேபோல தவெகவினரும் ஒருபுறம் தங்களது பணிகளை தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில், நயினார் நாகேந்திரன் கூட்டணி குறித்து பேசியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது நிறுபர்கள் தவெக - பாஜக கூட்டணி குறித்து பேசியதற்கு எனக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்துள்ளார்.
"தி.மு.க., ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் வேண்டுமானாலும் ஆரம்பித்து இருக்கலாம். ஆட்சிக்கு வருவதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்றும் கூறினார்.
மேலும் கூட்டணி குறித்து கேட்டதற்கு, "பா.ஜ.க - த.வெ.க., கூட்டணி குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. நேற்று தான் பிரதமர் மோடி, அமித்ஷாவை பார்த்தேன், இன்று உங்களை சந்திக்கிறேன், நாளை கோட்டையில் சந்திப்போம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.