ஸ்டாலின் கனவு பலிக்காது; தமிழகத்தில் அடுத்தது பாஜக ஆட்சி தான் – காயத்ரி ரகுராம்

டிசர்ட் போட்டுக் கொண்டு இந்தி எதிர்ப்பு தெரிவிப்பது எல்லாம் வியாபார தந்திரம் என்றும் பேச்சு

By: September 11, 2020, 3:33:50 PM

BJP will form the government in Tamil Nadu in 2021 says Gayathri Raguram : தமிழகத்தில் அடுத்து பாஜக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று பாஜக கட்சியின் கலை மற்றும் கலாச்சாரப்பிரிவின் மாநில தலைவர் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் கலை மற்றும் கலாச்சாரப்பிரிவு பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் காயத்ரி. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ”டிசர்ட் போட்டுக் கொண்டு இந்தி எதிர்ப்பு தெரிவிப்பது எல்லாம் வியாபார தந்திரம். வாய்ப்புகள் வந்தால் உடனே டிசர்டை கழற்றிவிட்டு பணம் பார்க்க சென்றுவிடுவார்கள். பொய் சொல்லி வாக்கு சேகரிப்பது போன்று தான் இந்த டிசர்ட் விவகாரமும்” என்று கூறினார் அவர். இது போன்ற ஏமாற்று வேலைகளை தமிழர்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள் என்று அவர் கூறினார்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் என்று அவர் நினைத்தால் அவரது கனவு நிச்சயமாக பலிக்காது. பாஜக தான் ஆட்சியை கைப்பற்றும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் காயத்ரி ரகுராம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Bjp will form the government in tamil nadu in 2021 says gayathri raguram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X